இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.
கஸ்டடி’ திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக இயக்குனர் வெங்கட் பிரபு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழ் திரையுலகம் ஏன் ஒரு பெரிய பான் இந்திய படத்தை கொடுக்கவில்லை? என்று நெறியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, நான் என்ன நினைக்கிறேன் என்றால் அவர்கள் தமிழ் பார்வையாளர்களுக்காக படத்தை இயக்குகின்றனர். லியோ திரைப்படம் கண்டிப்பாக அனைத்து மொழிகளிலும் கவனிக்கத்தக்க ஒரு படமாக இருக்கும் என்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.