NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடுதலை’ ஒரு திரைக்காவியம்-ரஜினிகாந்த்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்தை பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன், ராஜீவ் மேனன், தென்றல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குநர் வெற்றி மாறன். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் ‘விடுதலை’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். மேலும் விடுதலை திரைப்படத்தை பாராட்டி டிவிட்டரில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
‘விடுதலை… இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்.
சூரியின் நடிப்பு -பிரமிப்பு.
இளையராஜா -இசையில் என்றும் ராஜா.
வெற்றிமாறன் – தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த பதிவு தற்போது இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles