வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த March 31 திரையரங்குகளில் வெளியான படம் தான் ‘விடுதலை-1’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘விடுதலை -2’ படத்தின் புதிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நடிகர் சூரி தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.







