NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அல்லு அர்ஜுன் வாழ்த்துக்கு ஷாருக் பதில்

அட்லீ இயக்கத்தில் அண்மையில் வெளியான ’ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.700 ( இந்திய பெறுமதி) கோடி வசூலை நெருங்கி வருகிறது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது “X” பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “இந்த இமாலய வெற்றிக்கு ‘ஜவான்’ படத்துக்கு மிகப் பெரிய வாழ்த்து. ஒட்டுமொத்த இந்தியாவையும் மதிமயக்கி வருகிறது. உங்களுக்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்தோம்” என்று அல்லு அர்ஜுன் கூறியிருந்தார்.

இதனை Repost செய்துள்ள ஷாருக்கான், “மிக்க நன்றி நண்பா. உங்களுடைய அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

நான் உங்களிடமிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்பதை நான் ஒப்புக் கொள்ளவேண்டும். உங்களுக்கு ஒரு பெரிய “Hug” கூடிய விரைவில் நேரில் தனிப்பட்ட முறையில் வந்து தருகிறேன்” என்று ஷாருக் பதிலளித்துள்ளார்.

Share:

Related Articles