ராமாயணம்” மற்றும் “மகாபாரதம்”. இவை இந்துக்களின் புனித நூல்களில் மிகவும் மதிக்கப்படுகின்ற காவியங்களாகும்.
இந்தியாவில் ராமாயணத்தை தழுவி 1950களிலிருந்தே பல மொழிகளில்இ பல திரைப்படங்கள் வந்து அவை பெரும் வெற்றியை பெற்றன.
கடந்த வாரம் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த “ஆதிபுருஷ்” திரைப்படம் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
இத்திரைப்படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானதால் இந்தியா முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு மிகவும் கூடியிருந்தது.
இத்திரைப்படம் வெளியான இரு தினங்களுக்குள்ளேயே இப்படத்தின் காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றன.
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கக்கோரி நேபாளத்திலும் போராட்டம் நடைபெற்றது. நடைபெறுகின்றன.
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிலும்இ சுற்றுலா தலமான பொகாராவிலும் ஆதிபுருஷ் படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை காரணமாக 17 திரையரங்கங்களின் வாசலில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு ஹிந்தி படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.