NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணையத்தை கலக்கும் ‘சூது கவ்வும் -2’ படத்தின் மோஷன் போஸ்டர்

கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் ‘சூது கவ்வும்’. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ‘சூது கவ்வும் 2’ படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த போஸ்டரில், ‘சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சூது கவ்வும்-2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles