NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியன் 2 புது அப்டேட்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் ‘இந்தியன் 2 ‘ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.

இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் – 2’ படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்கினார். இப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம்,

வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் வரும் ஜூன் மாதத்தில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என தகவல் வெளியானது, அதிகாரப்பூர்வ ‘ரிலீஸ்’ தேதி மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை

படம் ரிலீசாக இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்க உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ‘பர்ஸ்ட் சிங்கள்’ விரைவில் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளது. “தாத்தா வாராரு.. தாத்தா வாராரு..” என்ற வரிகளில் தொடங்கும் இதன் இதன் பர்ஸ்ட் சிங்கிள் அமைந்துள்ளது.

இந்தியன் 2 ‘ பர்ஸ்ட் சிங்கிள்’ தாத்தா வாராரு தாத்தா வாராருன்னு … அனிருத் பாடியுள்ளார். மே 3 -வது வாரம் நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்தி இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Share:

Related Articles