NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இயக்குநர் சித்திக் காலமானார்

பிரபல இயக்குநரான சித்திக் கடந்த சில ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். நோய் தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சித்திக் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இயக்குனர் சித்திக் தமிழில் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான”Friends” திரைப்படத்தை இயக்கியிருந்தார். மேலும், ‘சாது மிரண்டா’, ‘காவலன்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

Share:

Related Articles