NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இளம் இயக்குனர் இளனுக்கு, அன்பு பரிசு.

இந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் முக்கியமான ஒருவர் இயக்குனர் இளன். இவர் தமிழில் வெளிவந்த, ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் படத்தை இயக்கினார்.இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.இதை தொடர்ந்து இவரின் இயக்கத்தால் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ஸ்டார். இப்படத்தில் கதாநாயகனாக கவின் நடித்துள்ளார். யுவன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் Sagar pentela, ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே இயக்குனர் இளனுக்கு சர்ப்ரைஸாக மிகப்பெரிய பரிசு ஒன்றை கொடுத்துள்ளனர். இளனுக்கு பல லட்சம் மதிப்புள்ள நிலம் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்கள். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மிகவும் நன்றி என கூறி இயக்குனர் இளன் மகிழ்ச்சியாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Share:

Related Articles