NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உருவக் கேலி இப்போதும் இருக்கிறது நடிகை “சமீரா ரெட்டி”

தமிழில், வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, வெடி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி.

2014-ம் ஆண்டு தொழிலதிபர் அக்‌ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இவர் முதல் குழந்தை பிறந்த பிறகு, தனது உடல் மாற்றங்கள் பற்றி பலர் பேசியதாகக் கூறியிருந்தார்.

சமீபத்தில் விமான நிலையம் சென்றிருந்தேன். அங்கிருந்த பாதுகாவலர் எனது ஆதார் கார்டை பரிசோதனை செய்த போது, ‘உங்கள் உடல் ரொம்ப மாறிவிட்டது’ என்றார்.

இது ஒரு வகையில் உருவக் கேலிதான். இங்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஒரு பெண்ணின் உடலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதை தங்களின் பிறப்புரிமை என்று நினைக்கிறார்கள். இதைக் கடந்துதான் நாம் செல்கிறோம்.

திரைப் படங்களின் மூலம் உருவாக்கிய பிம்பத்தைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அந்த அறியாமைதான் அப்படி எதிர்பார்க்க வைக்கிறது. அதை மன்னித்து கடந்து செல்லவேண்டும்’ என்று என் கணவர் சொல்வார். அப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறேன்” என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles