NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

என்னை Romantic Hero-வாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கு நன்றி- நடிகர் “விஜய் ஆண்டனி”

இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட “விஜய் ஆண்டனி” தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் “Romeo” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

“Romeo” திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

மேலும், இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆண்டனி, “என்னை romantic heroவாக பார்க்க ஆசைப்பட்ட மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடகவியல் நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் வேண்டுதல் பலித்துவிட்டது” என்று பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles