NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஏப்ரல் 11ம் திகதி திரை காண போகும் DeAr திரைப்படம்

இசை துறையில் மட்டுமல்ல நடிப்பிலும் சிறந்து விளங்குபவர் நம் ஜி.வி பிரகாஷ் குமார். அந்த வகையில் இப்போது ஜி .வி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் DeAr. இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றிருந்தது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 11ம் திகதி வெற்றிகரமாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles