NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒரே ஆண்டில் 3 படங்கள்- நடிகர் ஷாருக்கான்

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஒரு புதிய படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்துக்கு “Dunky” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ ஒன்றை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.

இந்த நிலையில், ’ஜவான்’ படம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் பேசிய ஷாருக்கான் “Dunky” திரைப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாவதை உறுதி செய்துள்ளார்.

’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது படமாக இது இருக்கும்.

Share:

Related Articles