NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓ.டி.டியில் வெளியாகவுள்ள ஆதிபுருஷ்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரபாஸின் ஆதிபுருஷ் பட டீசர் வெளியாகி VFX காட்சிகள் காரணமாக விமர்சிக்கப்பட்டது.

பின்னர் VFX காட்சிகளின் தரம் மேம்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் எதிர்வரும் 16ஆம் திகதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் வெளியாகிறது.

இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தின் ஓ.டி.டி உரிமை பல கோடிகளுக்கு இந்தப் படம் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமேசான் பிரைம் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாகி 50 நாட்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Share:

Related Articles