NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்கனாவின் “Emergency”படத்தின் ரிலீஸ் எப்போது?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் தான்  'Emergency'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். 

அத்துடன், படத்தை அவரே இயக்கியும் உள்ளார். படத்திற்கு திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். G.Vபிரகாஷ் இசையமைக்கிறார்.
 
தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் திகதியை அறிவிக்கும் விதமாக ஒரு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வரும் November  24 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Emergency டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “பாதுகாவலரா அல்லது சர்வாதிகாரியா? நம் தேசத்தின் தலைவர் தன் மக்கள் மீதே போர் தொடுத்த நமது வரலாற்றின் இருண்ட காலகட்டத்தை காணுங்கள்” என்று கூறியுள்ளார்.
Share:

Related Articles