NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கமல்ஹாசன்-H.வினோத் கூட்டணி உறுதி

கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் KH234′ படத்தில் நடிக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதனிடையே H.வினோத், கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கப்போவதாக சில தினங்களாகவே தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய விவசாயிகளை கமல்ஹாசன் மற்றும் எச்.வினோத், சென்னையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் கமல்ஹாசன் மற்றும் H.வினோத் இருவரும் கலந்து கொண்டதால் கமல்ஹாசனின் 233-வது படம் விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share:

Related Articles