NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்கி 2898 AD’ படம் எப்படி

பெரிய அளவில் பில்ட் அப்  பண்ணாங்களே, அப்படி என்னதான் இந்த ‘கல்கி 2898 AD’ படத்தில் இருக்கு என்கிற ஆர்வத்தில் படம் பார்க்கப் போனோம்.

படம் ஆரம்பிச்ச மூணாவது சீனிலேயே இது வெறும் பில்ட் அப் மட்டுமே என்கிற விஷயம் புரிஞ்சது. என்ன செய்ய டிக்கெட் கவுண்டர்ல பணத்தை திரும்பத் தர மாட்டாங்களே? வேற வழியில்லாமல் இந்தப் படத்தை பார்க்க ஆரம்பிச்சோம். நாக் அஸ்வின் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணியிருக்காரு.

மகாபாரத போர் முடிச்சதும் அஸ்வத்தாமனுக்கு  கிருஷ்ண பரமாத்மா, ‘உனக்கு சாவே கிடையாது’ என்கிற வரத்தை தருகிறார். கட் பண்ணா 2898ம் ஆண்டு ஒரு பெரிய மனுஷன் வாரணாசியில் இருக்கற மக்களை சிறைப்படுத்தி அட்டகாசம்  பண்றாரு. கர்ப்பமா இருக்கற பெண்களை பரிசோதனை என்கிற பெயரில் சாகடிக்கிறாரு.

ஒரு பொண்ணு மட்டும் தப்பிச்சு வேற ஊருக்கு போறா. அங்கேயும் வில்லனோட ஆட்கள் வந்து பிரச்னை பண்றாங்க. அஸ்வத்தாமா வந்து காப்பாத்தறாரு. இருந்தாலும் கர்ப்பமான பெண் கடத்தப்படுறாங்க. அதோட, அடுத்த பார்ட்டுக்கு லீட் வருது. தப்பிச்சோம்டா சாமின்னு நாம வெளில வர்றோம்.

இந்த மாதிரி அனிமேஷன் படமெல்லாம் குழந்தைகள் விரும்பி பார்ப்பாங்க. ஆனா, இந்த ‘கல்கி’ படத்தை பார்க்க வந்த  குழந்தைகள் பலர் பாதியிலே ஐஸ் க்ரீம் வாங்க போனதை பார்க்க முடிஞ்சது. இந்தப் படத்திலேயே ஓரளவு நல்லா நடிச்சது பிக் பி  அமிதாப்தான்.

வயசான அஸ்வத்தாமனாக நல்லா பண்ணியிருந்தாரு. பிரபாஸ் வராரு, போறாரு, சண்டை போடுறாரு. அவ்வளவுதான். நம்ம யோகி பாபுவோட காத்து ஆந்திரா பக்கமும் அடிச்சிருச்சு போல. படத்துல நடிக்கிற பிரம்மானந்தம் மருந்துக்குக் கூட சிரிக்க  வைக்க ட்ரை பண்ணலை. மொட்டை தலையோட வர்றாரு நம்ம கமல் சார்.

இவரோடகெட்டப்பை ஒரு பக்கம் பார்க்கும்போது இது கமலஹாசனா? அல்லது மொட்டை ராஜேந்திரனா? என யோசிக்க வைக்குது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles