தங்க நகைகளை விரும்பும் ஒரு அதிகாரம் படைத்த கிராமத்து நபர் கொலை செய்யப்படுவதுடன் தான் சத்திய சோதனை படம் ஆரம்பமாகிறது.
தன் காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பும் கதாநாயகன் பிரதீப் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை பார்க்கிறார். பதற்றம் அடையாமல் உடலை ஒரு ஓரமாக இழுத்து வைத்துவிட்டு அதில் இருந்த தங்க நகைகளை எடுக்கிறார்.
அந்த நகைகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். ஆனால் பிரதீப் சொல்வதை நம்பாத பொலிசார் அவரை காவலில் எடுக்கிறார்கள்.
சத்திய சோதனை படம் மூலம் நம்மை எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. பிரதீப் தான் கதாநாயகன் என காட்டியிருந்தாலும், பொலிஸ் அதிகாரி குபேரன் அனைவரையும் கவர்கிறார்.
அப்பாவி மற்றும் நேர்மையானவராக வரும் பிரேம்ஜி அமரனின் கதாபாத்திரம் வாழ்க்கை பற்றி எதுவும் தெரியாதவராக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இது படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்துவிடுகிறது.
இடைவேளைக்கு பின் வரும் மூதாட்டி கதாபாத்திரம் அருமையாக இருக்கிறது. சத்திய சோதனை முழுவதுமாக இல்லாமல் ஆங்காங்கே படம் நம்மை கவர்கிறது.