NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சந்தானம்-கவின் மோதல்.

இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தின் ரிலீஸ் மே மாதம் 10ம் திகதி என சந்தானம் அறிவித்துள்ளார். சந்தானம் நடிப்பில் இவ்வாண்டு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறியது என சந்தானம் கூறினார். வரும் மே 10 ஆம் தேதி இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அதே திகதியில் நடிகர் சந்தானமும் தனது படத்தை வெளியிட உள்ளார். இந்த முறை கவினுடன் சந்தானம் மோத முடிவு செய்து விட்டாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Share:

Related Articles