தென்னிந்திய சினிமாவில் பிரபல காமெடி நடிகரான நடிகர் சார்லி, குணச்சித்திர நடிகர் ஆகவும் அறியப்பட்டவர். இவர் அதிகமாக படித்திருந்தாலும் அரச உத்தியோகத்தையும் உதறித் தள்ளி நான் நடிகனாக தான் ஆவேன் என பிடிவாதமாக இருந்தார்.
1983 ஆண்டு பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகராகவும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் சார்லியின் மகன் அஜய்தங்கசாமி – பெர்மிசியாடெமி ஆகிய இருவருக்கும் நேற்றைய தினம் திருமண வரவேற்பு பிரம்மாண்டமாக நடந்துள்ளது.
அந்த நிகழ்வில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளதோடு முதலமைச்சரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.