NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூர்யாவின் வாடிவாசல் எப்போது? தயாரிப்பாளர் சொன்ன தகவல்

சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அறிவிப்பு வந்தும் நீண்ட காலம் இந்த படம் தொடங்காமல் தாமதம் ஆகி வருவது ரசிகர்களுக்கு தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்புக்காக மாடுகளுக்காக தற்போது பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறதாம். அது பற்றி தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.

வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என அவர் கூறி இருக்கிறார்.

வெற்றிமாறன் தற்போது விடுதலை 2ம் பாகத்தில் பிசியாக இருக்கும் நிலையில் அதன் பணிகள் முடிந்த பிறகுதான் வாடிவாசல் பணிகளை தொடங்க இருக்கிறார்.

Share:

Related Articles