NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“தனி ஒருவன் 2” Update கொடுத்த மோகன் ராஜா

ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தனி ஒருவன்.

“AGS Entertainment” சார்பில் கல்பாத்தி S.அகோரம் தயாரிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி இருந்தார். ஹிப் ஹாப் தமிழா இந்த படத்துக்கு இசையமைத்து இருந்தார். இன்றோடு இந்த படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இதனை கொண்டாடும் வகையிலும், ரசிகர்களின் நீண்ட கால கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில், தனி ஒருவன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகும் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்று தயாரிப்பு நிறுவனம் வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கிறது.

Share:

Related Articles