NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனுஷுடன் இணையும் அபர்ணா பாலமுரளி

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

தனுஷின் 50வது படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், SJ சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில், தனுஷின் 50வது படத்தில் இணையவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று படங்களில் நடித்த அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles