NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருப்பதி கோவிலில் காதலருடன் திருமணம்- ஜான்வி சொன்ன ஒத்த வார்த்தை

Bollywood நடிகை ஜான்வி கபூரும், தொழில் அதிபர் ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருகிறார்கள். 

திருப்பதி கோவிலுக்கு செல்லும்போது எல்லாம் ஷிகரையும் துணைக்கு அழைத்துச் செல்கிறார் ஜான்வி கபூர்.

ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டுடன் சேர்த்து தெலுங்கு திரையுலகிலும் பிசியாகிவிட்டார். முதல் தெலுங்கு படத்தில் நடித்து முடிக்கும் முன்பே அடுத்த பட வாய்ப்பு வந்துவிட்டது. 

ஜான்வியை மட்டும் அல்ல அவரின் தங்கையான குஷி கபூரையும் தமிழ் படத்தில் பார்க்க கோலிவுட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தங்க நிற சேலை அணிந்து திருப்பதி கோவிலில் ஷிகர் பஹாரியாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் ஜான்வி என புகைப்படக் கலைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார்.

Instaல் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூரின் கண்ணில் அந்த போஸ்ட் படவே,(எது வேணுடுமானாலும் ) என கமெண்ட் அளித்துள்ளார். ஜான்வியின் கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Share:

Related Articles