நடிகை டாப்சியும், பிரபல பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவும் நீண்ட காலமாகவே காதலித்து வருகிறார்கள். இருவருக்கும் உதய்பூரில் இந்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனது திருமணம் குறித்து வெளியாகும் சர்ச்சைக்கு டாப்சி விளக்கம் அளித்துள்ளார்.
10 ஆண்டுகளாக நானும், மத்தியாசும் காதலித்து வருகிறோம். திருமணம் குறித்து தற்போது வெளியாகும் அனைத்து வதந்திகளுக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்று தான்.
அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. காதலிக்கும் போது இருந்ததை விட, இப்போதுதான் அவர் எனக்கு ஏற்றவராக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.