NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரைப்படமாகிறது கங்குலியின் வாழ்க்கை வரலாறு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் BCCI தலைவராக இருந்தவர் சௌரவ் கங்குலி.

இவர் 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகினார். அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர்.

2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் சூதாட்ட விவகாரம் தலைதூக்கிய போது கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

இதையடுத்து, கங்குலியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படலாம் என்றும் இதில் நாயகனாக ரன்பீர் கபூர் நடிக்க கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஆயுஷ்மன் குரானா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் சில மாதங்கள் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles

Manjummal Boys May 3 OTTயில்