NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தீபாவளிக்கு அசத்தலாக களமிறங்கும் “Zee தமிழ்”

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது “Zee தமிழ்”

அதாவது காலை 8 மணி முதல் 9.30 மணி வரை சுகி சிவம் தலைமையில் உணவு பற்றிய விழிப்புணர்வு வளர்ந்து உள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் மோகன சுந்தரம், RJ ஆனந்தி, நீலகண்டன், பர்வீன் சுல்தானா, சாந்தமணி, சதீஸ் ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஆர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‛காதர் பாஷா’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா இரண்டாம் பாகம் November 12ம் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக மாலை 4.30 மணி முதல் சந்தானம் நடிப்பில் காமெடி கலந்த திரில்லர் திரைப்படமான “DD Retunes” திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

இறுதியாக இரவு 7 மணி முதல் 10 மணி வரை “சரிகமப” சுட்டிஸ் பங்கேற்கும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Read more at: https://m.dinamalar.com/cinema_detail.php?id=117497

Share:

Related Articles