NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி

‘விடாமுயற்சி’ படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்து வருகிறார்.

அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்த முடிந்த நிலையில், அடுத்து ஜார்ஜியாவில் 2-வது கட்ட படப்பிடிப்பு என தகவல் வெளியானது.

இந்நிலையில், நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அஜித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles