NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய Bollywood நடிகை கத்ரீனா

Bollywood திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். இவர் நடிப்பில் சமீபத்தில் தான் Tiger 3 படம் வெளிவந்தது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ‘Merry Christmas’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி.

சமீபத்தில் Jeddah-வில் நடந்த திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை கத்ரீனா கைஃப், ‘Merry Christmas’ படம் குறித்தும் விஜய் சேதுபதியை பற்றியும் பேசினார்.

‘Merry Christmas’ ஒரு அற்புதமான திரைப்படம். நான் இதுவரை நடித்த படங்களில், இப்படம் தான் கஷ்டமாக இருந்தது. மேலும் விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது சவாலாக இருந்தது”.

“ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியாக தான் எடுத்தோம். தமிழ் பாதிப்புக்காக நானே தமிழ் பேசி நடித்தேன்.

இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி ஒரு அற்புதமான நபர்” என பேசியுள்ளார். கத்ரீனா கைப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles