கமல்ஹாசன், ஒரு “Big Boss” போட்டியாளரை வெளியேற்றுவதற்கு அவ்வளவு சாதாரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார். முதல் சீசனில் மக்களால் வெறுக்கப்பட்ட ஜூலியை கூட அவர் வெளியே அனுப்பும் போது ’இவர் என் தங்கை போன்றவர், இவரை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது’ என்று மரியாதையாக அனுப்பி வைத்தார்.
அப்படிப்பட்ட உலகநாயகன் கமல்ஹாசன் பிரதீப்பை யோசிக்காமல் உடனே Red Card கொடுக்க அனுமதித்ததும் அவரை வெளியேற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான Big Boss போட்டியாளர் பாவா செல்லதுரை குறித்து பிரதீப் ஒரு குற்றச்சாட்டு கூறினார். அப்போதே பிரதீப் மீது ஒரு கரும்புள்ளி கமலஹாசனுக்கு விழுந்தது.
இதையெல்லாம் மனதில் வைத்து தான் ஒரு சான்ஸ் கிடைத்தபோது ரெட் கார்ட் என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி பிரதீப்பை கமல் வெளியேற்றி விட்டார் என்று கூறப்படுகிறது.