NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல இயக்குனர் துரை காலமானார்

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற ‘பசி’ திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 84. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘பசி’ திரைப்படத்திற்கு 1979-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இயக்குனர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். குறிப்பாக அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மனதை விட்டு நீங்காதவை.

இயக்குனர் துரையின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles