NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாக விஜய் ஸ்ரீ ஹரி.

விஜய் ஸ்ரீ ஹரி தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கும்கி, மைனா போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் தான் வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி ஹீரோவாக அறிமுகமாகிறார் என கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது என்றும், ரோஜா கம்பைன்ஸ் நிறுவனம் மூலம் காஜா மொய்தீன் தான் இப்படத்தை தயாரிக்கிறார் என்றும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Share:

Related Articles