அமெரிக்க கார்ட்டூன் சார்ளஸ் உருவாக்கிய கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கிய காமெடி திரில்லர் வகை தொடர்தான் வெனஸ்டே. மொத்தமாக 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு நெட்பிலிக்ஸில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
ஜென்னா ஒர்டேக்கா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த குறித்த தொடர் 4 எம்மி விருதுகளையும் பெற்றிருந்தது. இந்தநிலையில் இத்திரைப்படத்தின் பாகம் இரண்டு தற்போது தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் புதிய முகங்கள் சிலவும் அறிமுகமாகவுள்ள நிலையில் தற்போது திரைப்பட போஸ்டரும் வெளிவந்துள்ளது.

மேலும் இதன் முதல் பாகம் எதிர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியும், இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதியும் வெளியாகவுள்ளது.