NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டில் புதிய தொடர் அறிவிப்பை வெளியிட்ட திருமுருகன்

தமிழ் சினிமாவில் பரத் நடித்த எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் திருமுருகன்.

படங்களை தாண்டி இவர் Sun தொலைக்காட்சியில் மெட்டி ஒலி, நாதஸ்வரம், தேன்நிலவு, குலதெய்வம், கல்யாண வீடு ஆகிய சீரியல்களை இயக்கியிருந்தார்.

கடந்த 2020ம் ஆண்டு இவரது இயக்கத்தில் கடைசியாக கல்யாண வீடு சிரயல் முடிவடைந்தது.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தில் திருமுருகன் ஒரு புதிய தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆனால் அந்த தொடர் தொலைக்காட்சிகளில் வராது என்றும் தனது YouTube சேனலில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை கேட்டதும் ரசிகர்கள் அவரது அடுத்த தொடர் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ஆவலாக உள்ளனர். 

Share:

Related Articles