NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மறைந்த நடிகர் “சுஷாந்த் சிங் வீட்டை” வாங்கிய நடிகை “அடா சர்மா”

பிரபல ஹிந்தி நடிகர் “சுஷாந்த் சிங் ராஜ்புத்”, கடந்த 2020-ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள “Mont Blanc” அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்துகொண்ட வீட்டுக்கு யாரும் வாடகைக்குக் கூட வரவில்லை என்று சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த வீட்டை, நடிகை அடா சர்மா இப்போது வாங்கியுள்ளார். இதை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதுபற்றி அடா சர்மாவிடம் கேட்டபோது, “எல்லாம் இறுதி செய்யப்பட்டதும் அதை தெரிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

Share:

Related Articles