NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரத்னம் திரைப்பட ட்ரைலர் வெளியானது

விஷால் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 3வது முறை கூட்டணியில் வெளிவரவுள்ள படம் தான் ரத்னம். இதற்கு முன்னர் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த தாமிரபரணி, பூஜை ஆகிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றபை பெற்றது.

இந்நிலையில் ரத்னம் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரஷாத் இசையமைக்கிறார். ஏப்ரல் 26ம் திகதி உலகம் முழுதும் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் பிரியா பவானி ஷங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி ஆகியோரை காணக்கூடியதாய் இருந்தது. ட்ரைலரில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் வருவதால் கொஞ்சம் ஹெட்செட் போட்டு ரசிகர்கள் இதை பார்ப்பது நல்லது.

Share:

Related Articles