NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரூ.900 கோடி வசூலை கடந்த ‘ஜவான்’

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ‘ஜவான்’ திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜவான்’ திரைப்படம் ரூ.907.54கோடி வசூலை குவித்துள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Share:

Related Articles