NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசா நிபந்தனைகளை குறித்து நடிகை ‘டாப்சி’

‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.

இந்தநிலையில் நடிகை டாப்சி வெளிநாடுகளுக்கு செல்வதற்கான விசா நிபந்தனை மற்றும் நடைமுறைகளை சாடி தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.

‘வெளிநாடு செல்வதற்கு விசா பெறுவதற்காக தற்போது இருக்கும் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக உள்ளன. சமூகத்தில் உள்ள ஏழைகளுக்கு விசா நடைமுறைகள் எளிதாக இல்லை.

தேவையான அளவுக்கு வங்கியில் பணம் இருப்பதை காட்டிவிட்டு செல்வந்தர்கள் சுலபமாக விசா பெற்று விடுகிறார்கள். ஆனால் குறைந்த வருவாயில் இருப்பவர்கள் விசா பெறமுடியாமல் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். வங்கி இருப்பில் பணம் குறைவாக இருந்த காரணத்தால் “டங்கி” படக்குழுவினரில் சிலர், அமெரிக்கா விசா பெற முடியாமல் போய் விட்டது” என்றார்.

Share:

Related Articles