NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விடுதலை 2 – படத்திற்கான கதையில் இப்படியொரு மாற்றமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சூப்பர்ஹிட்டானது.இந்நிலையில், இந்த ஆண்டு விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென இரண்டாம் பாகத்திற்காக ஏற்கனவே 20 நாட்கள் படப்பிடிப்பிற்கு வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், தற்போது கதையில் சில திருத்தங்களை செய்துள்ளதால், மீண்டும் 50 முதல் 60 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி விடுதலை இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. 

Share:

Related Articles