TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
இது லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 4வது திரைப்படமாகும். வேட்டையன் படம் இதுவரை உலகளவில் ரூ. 223 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், வேட்டையன் படம் உலகளவில் செய்த வசூல் மூலம் ரூ. 100 கோடி வரை ஷேர் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ரிலீஸுக்கு முன் செய்யப்பட்ட பிசினஸ் மூலம் ரூ. 200 கோடி வசூல் கிடைத்தது.ரிலீஸுக்கு பின் இப்படம் ரூ. 100 கோடி ஷேர் செய்துள்ளது.







