NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வைரமும், முத்துவும் பிறந்திருக்கிறார்கள்’ – வைரலாகும் சின்மயியின் பதிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

வைரமும், முத்துவும் பிறந்திருக்கிறார்கள் என என் குழந்தைகளை வைர முத்து இரசிகர்கள் பதிவிடுகின்றார்கள் என்று பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இரசிகர் ஒருவர் உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிடுமாறு கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பாடகி சின்மயி, ‘தற்போது முடியாது, எனக்கே நிறைய வெறுப்பு வருகிறது. என் குழந்தைகளுக்கும் அது வரவேண்டாம் என விரும்புகிறேன். இப்போதே வைரமுத்துவின் இரசிகர்கள், வைரமும், முத்துவும் பிறந்திருக்கிறார்கள் என பதிவிட்டு வருகின்றார்கள். இந்த சமயத்தில் என் குழந்தையை காட்டினால் வைரமுத்து போல இல்லையே என்று கருத்துக்களை வெளியிடுவார்கள் என சின்மயி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. பாடகி சின்மயிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடிக்கு கடந்தாண்டு தான் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

Share:

Related Articles