NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரலாகும் சந்திரமுகி-2 போஸ்டர்

இயக்குனர் p.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “சந்திரமுகி 2 “. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

Lyca நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு M.M கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது.

“சந்திரமுகி 2” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. வேட்டையன் ராஜாவாக லாரன்ஸ் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles