NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

100 கோடி வசூலித்த கோட்..!

தளபதி விஜயின் ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘கோட்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இப்படம் வெளியாகிய முதல் நாளே உலகம் முழுவதும் இந்திய ரூபாய் மதிப்பில் 104.75 கோடியை வசூலித்துள்ளது. மேலும், இரண்டாம் நாளில் ரூ.54.90 கோடி வசூலித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles