NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பவன் கல்யாணின் OG படத்தில் அர்ஜுன் தாஸ்

கைதி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இதன்பின் விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். மேலும் விக்ரம் படத்தில் இறுதி காட்சியிலும் தோன்றினார்.

அடுத்ததாக அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் OG படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். ஆனால், இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கிறாரா என இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles