NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Bigg Boss” Season 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்

“Bigg Boss Season 7” குறித்த Update   ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. அந்த வகையில்  Season 7ல் நான்கு கதாநாயகிகளை Vijai TV களம் இறக்க திட்டமிட்டுள்ளது.

மற்ற சீசன்களை காட்டிலும் Season 7 வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த முறை இரண்டு வீடுகளை தயார் செய்து வைத்துள்ளனர் புதிய பழைய  போட்டியாளர்களை கலந்து தரையிறக்க போகின்றனர்.

ஏற்கனவே செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், பெண் பேருந்து ஓட்டுநர் சர்மிளா, பப்லு, ரேகா  நாயர் உள்ளிட்டோர் தேர்வான நிலையில், இப்போது விஜய் டிவியில் கதாநாயகியாக நடிக்கும் நான்கு கதாநாயகிகளை தேர்வு செய்துள்ளனர்.

விஜய் டிவியின் தொகுப்பாளினியும் தேன்மொழி B.A.B.L என்ற சீரியலின் கதாநாயகிமான ஜாக்குலின் Season 7ல் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார்.

அதே போலவே தமிழும் சரஸ்வதியும்  சீரியலில் கதாநாயகி நட்சத்திரா Bigg Bossல் Entry கொடுக்கப் போகிறார்.

இவர்கள் மட்டுமல்ல பாரதி கண்ணம்மா சீரியலில் தன்னுடைய உச்சகட்ட  வில்லத்தனத்தை  காட்டிய வெண்பா கேரக்டரில் நடித்த நடிகை பரீனா மற்றும் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் கனகச்சிதமாக பொருந்தி நடித்த விஜே அர்ச்சனாவும் Bigg Boss Season 7ல் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகின்றனர்.

Share:

Related Articles