“Bigil” படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஹிந்தி, த மிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் September 7 வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் Prevueஐ படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
அனல் பறக்கும் Action காட்சிகளுக்கு நடுவே ராணுவ அதிகாரியாக அறிமுகமாகிறார் ஷாருக்கான். இன்னொரு காட்சியில் James Bond வில்லன் போல முகத்தில் முகமூடியுடன் ஒரு காட்சியில் அமர்ந்திருக்கிறார்.
இன்னொரு Getupஇல் உடல் முழுக்க கட்டு போல துணியை சுற்றிக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து காட்டப்படும் சண்டைக் காட்சிகள் ‘பதான்’ படத்தை நினைவூட்டுகின்றன. இறுதியில தலையில் கட்டுடன் Metro ரயிலுக்குள் நுழையும் ஷாருக், கட்டை அவிழ்த்து மொட்டைத் தலையுடன் Suprise கொடுக்கிறார்.







