NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன அழுத்தம் தொடர்பில் அமீர் கானின் மகள் ஐராகானின் உருக்கமான பதிவு

பாெலிவுட்டின் பிரபல நடிகரான அமீர்கானின் மகள் ஐராகான் தான் கடினமான மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக, தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். காரணமில்லாமல் அழுகை வரும், எப்போதும் சோகமாகவே இருப்பேன். உணவு சாப்பிடக்கூட முடியாது. ஒருமுறை தொடர்ந்து நான்கு நாள்கள்கூட உணவு உண்ணாமல் இருந்திருக்கிறேன்.

எப்போதும் தாழ்வு மனப்பான்மையிலேயே இருந்தேன். இந்தப் பிரச்னை எனக்கு மட்டுமல்ல என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே இருந்துள்ளது.

நான் முழுமையான மனச்சோர்வில் இருப்பதாக உணர்ந்தேன். அதற்கு நானே முழு காரணம் என உணர்ந்து என்னை நானே குற்றம்சாட்டிக்கொண்டேன். அதிலிருந்து வெளியேற முடியும் என முழுமையாக நம்பி சிகிச்சைகளை மேற்கொண்டேன்.

என்னை போல் இருப்பவர்களுக்கானதுதான் இந்த அறக்கட்டளை’ என தனது கருத்தினை குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles