NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரூ.170 கோடி (இந்தியப் பெறுமதி) சொத்து மதிப்பு தகவலை மறுத்த மனோஜ் பாஜ்பாய்

பொலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் Manoj Bajbaai" "Femily man" Web தொடர் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். 

அண்மையில் வெளியான அவரது (Court Room Drama) தொடரான  "Sirf Ek Bandaa Kaafi Hai" வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் Manoj Bajbaai  சொத்து மதிப்பு ரு.170 கோடி (இந்தியப் பெறுமதி) என தகவல் பரவி வந்தது.

இது தொடர்பாக கேட்கப்பட்ட செய்தியாளர் கேள்விக்கு சிரித்த அவர், “இன்றும் என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட பணத்தை சேர்க்க நான் போராடிக் கொண்டிருக்கிறேன்.  
 
(Aligarh - 2015),  (Bhonsle - 2018) போன்ற என்னுடைய பட வரிசைகளின் மூலம் என்னால் அந்த அளவு பணத்தை ஈட்டுவது சாத்தியமில்லை. இதுபோன்ற செய்திகளை படித்து தயாரிப்பாளர் என் சம்பளத்தை உயர்த்துவார் என நம்புகிறேன்” என்றார்.

மேலும்,  நல்ல படங்களின் மூலம் பார்வையாளர்கள் மற்றும் என்னுடைய நலம் விரும்பிகளிடமிருந்து அன்பை பெறுவது மட்டுமே இதற்கான கைமாறாக இருக்கும்” என்றார்.
Share:

Related Articles