NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Cook With Comali” நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்- போட்டி பலமாத்தான் இருக்கும் போல

Vijai TVயின் முக்கியமான நிகழ்ச்சிகளில் Bigg Bossஐ தொடர்ந்து முன்னிலையில் உள்ளது Cook With Comali நிகழ்ச்சி தான். 3 சீசன்களை சிறப்பாக முடித்துள்ள Cook With Comali நிகழ்ச்சி தற்போது 4வது சீசனின் நிறைவு கட்டத்தில் உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் Semi Finals நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த வாரத்திலேயே விசித்ரா முதல் போட்டியாளராக தேர்வானார்.

இந்நிலையில் நேற்றைய Semi Finals போட்டியில் 4 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 3 பேர் Final போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதலில் மைம் கோபி, தொடர்ந்து சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனால் போட்டியிலிருந்து கிரண் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத Twistடாக ஐந்தாவது பைனலிஸFinalistடாக கிரண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் போட்டிக்கு இதுவரை 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் Wild Card சுற்றின்மூலம் ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு Final சுற்றுக்கு அனுப்பப்படுவார்.

Share:

Related Articles