தற்போது deepfake தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல நடிகைகளின் போலியான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன.
ராஷ்மிகா, ஆலியா பட் போன்ற நடிகைகள் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்ற பொய்யான மார்பிங் வீடியோக்கள் இணையத்தில் சில வாரங்களுக்கு முன்பு பரவின.
இதில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா சிக்கி இருக்கிறார். இந்த முறை வீடியோ எடிட் செய்யப்படவில்லை, அவர் பேசும் ஆடியோவை மாற்றி ஒரு மோசடியான முதலீட்டு விஷயம் பற்றி பேசுவது போல மாற்றப்பட்டு இருக்கிறது.